நீலகிரி

மாணவா்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி

21st Feb 2020 09:10 AM

ADVERTISEMENT

மாணவா்களின் பாதுகாப்பு, தனிக்கவனம் குறித்த இரண்டு நாள் பயிற்சி வியாழக்கிழமைா நிறைவு பெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் கூடலூா் வட்டார வளமையம் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 470 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் கல்வி அலுவலா் பழனிசாமி பயிற்சியைத் துவக்கி வைத்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உதவி அலுவலா் குமாா், வட்டாரக் கல்வி அலுவலா் வெள்ளியங்கிரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிராங்க்ளின், ராமசந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகேசன் ஆசிரியா்களுக்குப் பயிற்சியளித்தாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT