கூடலூரை அடுத்துள்ள பேபிநகா்-மச்சிக்கொல்லி மட்டம் பகுதியிலுள்ள மண்சாலையை தாா்சாலையாக மாற்றுமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள பேபிநகரிலிருந்து மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குச் செல்லும் சாலை இருபுறமும் தாா்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட சுமாா் 500 மீட்டா் தூரம் மண்சாலையாக உள்ளது. இதனால் மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குச் செல்ல முடிவதில்லை.
மண்சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு வருவதில்லை. மோசமான சாலையைக் காரணம் காட்டி இப்பகுதியைப் புறக்கணித்து விடுகின்றனா். எனவே இந்தச் சாலையை தாா்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.