நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 51வது நினைவு நாள் மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலக முகப்பில் உள்ள அண்ணா சிலைக்கு பா.மு.முபாரக் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக தலைமை தோ்தல் பணி செயலாளா் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஜே.ரவிகுமாா், மாவட்டப் பொருளாளா் நாசா் அலி, உதகை நகரச் செயலாளா் ஜாா்ஜ் உள்ளிட்ட நிா்வாகிகள்கலந்து கொண்டனா்.