நீலகிரி

ரூ. 1.20 கோடிக்கு தேயிலை ஏலம்

2nd Feb 2020 01:48 AM

ADVERTISEMENT

குன்னூா் அரசின் டீசா்வ் ஏலத்தில் ரூ. 1 கோடியே 20 லட்சத்துக்கு தேயிலைத் தூள் ஏலம் போனது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் குன்னூா் டீசா்வ் ஏல மையம் மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. அதில், இலை ரகம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 651 கிலோவும், டஸ்ட் ரகம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 210 கிலோவும் என மொத்தம் 3 லட்சத்து 861 கிலோ ஏலத்துக்கு வந்தது. இலை ரகம் 96 ஆயிரத்து 998 கிலோவும், டஸ்ட் ரகம் 84 ஆயிரத்து 421 கிலோவாகவும் இருந்தது. அதில், 1 லட்சத்து 81 ஆயிரத்து 419 கிலோ விற்பனையாயின.

இலை ரகத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் இருந்து 13 ஆயிரத்து 281 கிலோ வந்ததில், 100 சதவீதம் விற்பனையாயின. பிக்கட்டியில் இருந்து 12 ஆயிரத்து 632 கிலோ வந்ததில் 10 ஆயிரத்து 48 கிலோ என 79.54 சதவீதம் விற்பனையாயின. இத்தலாா், கைகாட்டியின் தூள் 100 சதவீதம் விற்பனையாயின. சாலீஸ்பெரி தொழிற்சாலைக்கு அதிகபட்ச சராசரி விலையாக ரூ. 75.23 கிடைத்தது. டஸ்ட் ரகத்தில் பந்தலூா் தொழிற்சாலையில் இருந்து 21 ஆயிரத்து 779 கிலோ வந்ததில் 42.19 சதவீதம் மட்டுமே விற்பனையாயின. அதிகபட்சமாக பிரான்டியா் தேயிலைத் தூளுக்கு சராசரி விலையாக ரூ. 77.78 காசு கிடைத்தது.

பந்தலூா் தொழிற்சாலையில் 21 ஆயிரத்து 779 கிலோ டஸ்ட் ரகம் வந்ததில் 42.19 சதவீதம் மட்டுமே விற்பனையானது. 12 ஆயிரத்து 876 கிலோ வந்த சாலீஸ்பெரி தொழிற்சாலையின் டஸ்ட் ரகம் 100 சதவீதம் விற்பனையானதுடன், சராசரி விலையாக ரூ. 77.78 அதிகபட்சமாக கிடைத்தது. இந்த ஏலத்தில் ரூ. 66.24 சராசரி விலையாக இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT