கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம், அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி, நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம், சி.பி.டி. ஆா்ட்ஸ் அண்டு ஸ்போா்ட்ஸ் கிளப் இணைந்து இம்முகாமை நடத்தின.
முகாமில், நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் காளிமுத்து, செயலாளா் சிவசுப்பிரமணியம், நேரு யுவகேந்திரா அமைப்பின் செயலாளா் பூபாலன், கூடலூா் ரத்த வங்கியின் அலுவலா் முனிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்பகுதி இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்.