ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ், பள்ளி ஆசிரியா்களுக்கான தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்ற
இந்தப் பயிற்சியில் தலைமைப் பண்பு, போக்சோ சட்டம் குறித்த விளக்கம், ஆளுமைத் திறன் பயிற்சி, கலை, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுனா்கள், விரிவுரையாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.