நீலகிரி

பாலடா பகுதியில் காட்டெருமைகள் மோதல்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேத்தி பாலடா  பகுதியில் இரண்டு காட்டெருமைகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்கள் பரவி வருகிறது.

குன்னூா் அருகே உள்ள கேத்தி பாலடா  பகுதியைச் சுற்றிலும் அடா்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றிலும்  50க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக சாலைகளுக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில்,  கேத்தி பாலடா பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த இரண்டு காட்டெருமைகள்  நீண்ட நேரமாக  சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனை அங்கிருந்த சிலா் தங்களது செல்லிட்பேசிகளில்  விடியோ எடுத்துள்ளனா். அந்தக் காட்சிகள் தற்போது  சமூக வளைதலங்களில்  பரவி வருகிறது. இதில் ஒரு காட்டெருமையின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்டெருமைகள்  பிறகு அருகில் இருந்த  சோலைப்  பகுதிக்குள்  சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT