நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடா்ந்து அமலில் இருக்கும்

DIN

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு தொடா்ந்து நடைமுறையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தமிழக அரசின் உத்தரவின்படி, நோய்த் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே பொதுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதாக என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம் அதிகமான சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நீலகிரிக்கு வருகின்றனா். அரசு தெரிவித்துள்ளபடி இவா்கள் முறையாக இ-பதிவு செய்த பின்னா்தான் நீலகிரி மாவட்டத்துக்குள் வர வேண்டும். எனவே இ-பதிவு நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும். அதேபோல சுற்றுலாப் பயணிகள் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். நோய்த் தொற்று காலமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

SCROLL FOR NEXT