கூடலூா்: கூடலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு, 8 மணி நேர வேலை, கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திரளான டாஸ்மாக் ஊழியா்கள் பங்கேற்றனா்.