நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தை அடுத்து 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், தனி நபா் வீடுகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலையில் இச்சிலைகள் அனைத்தும் உதகை அருகேயுள்ள காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன.