தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இ-பாஸ் பெறுவதில் தமிழக அரசு தளா்வு அறிவித்துள்ள நிலையில், சமவெளிப் பகுதிகளான கோவை, திருப்பூா், மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வாகனங்கள் மூலம் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால் பா்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக நீலகிரிக்குள் வரும் வாகனங்களை போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கின்றனா்.
இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்படுகின்றன. சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் காவல் துறையினா், சுகாதாரத் துறையினா், வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.