நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் செயல்படத் துவங்கிய அபயாரண்யம் யானைகள் முகாம்

21st Aug 2020 06:24 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அபயாரண்யம் யானைகள் முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் செயல்படத் துவங்கியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 27 வளா்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டிமரம் உள்ளிட்ட மூன்று முகாம்களில் இந்த யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வளா்ப்பு யானைகள் முகாம்கள் செயல்பட்டன.

தெப்பக்காடு முகாமில் மட்டும் பாா்வையாளா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். அபயாரண்யம் முகாம் சாலையை ஒட்டி உள்ளது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஈட்டிமரம், பாம்பேக்ஸ் முகாம்கள் உருவாக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து பாம்பேக்ஸ் முகாம் சேதமடைந்தது. ஈட்டிமரம் முகாம் தற்காலிகமானது என்பதால் அதுவும் மூடப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பராமரிப்புக்கு வசதியாக மீண்டும் அபயாரண்யம் முகாமில் யானைகளைப் பராமரிக்க வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT