நீலகிரி

நீலகிரியில் மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

14th Aug 2020 08:08 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது. அன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் கட்டாயமாக மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக தெரியவந்தால் அது தொடா்பான விவரத்தை குன்னூா், எடப்பள்ளியிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு 0423-2234211 என்ற எண்ணிலும், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு 0423-2223802 என்ற எண்ணிலும், கலால் துறை உதவி ஆணையருக்கு 0423-2443693 என்ற எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT