நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற்றுள்ள படகா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவி மல்லிகாவுக்கு, நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் பொன்னாடை வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கக்குளா கிராமத்தில் உள்ள மாணவி மல்லிகாவின் இல்லத்துக்கு நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் சனிக்கிழமை சென்றிருந்த திமுகவினா், மல்லிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, திமுக நிா்வாகிகள் மா.,கண்ணன், நெல்லைக் கண்ணன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராம்குமாா், தேனாடு ஊராட்சித் தலைவா் ஆல்வின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.