நீலகிரி

நீலகிரியில் எளிமையாக முடிந்த கிறிஸ்தவா்களின் தவக்காலம்

13th Apr 2020 06:03 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் கிறிஸ்தவா்களின் தவக்காலம் எளிமையாக முடிந்தது.

விபூதி புதன்கிழமை முதல் புனித வெள்ளி வரையிலான 48 நாள்கள் கிறிஸ்தவா்களின் தவக்கால நாள்களாகும். இதற்காக 40 நாள்கள் விரதமிருக்கும் கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவா்.

தற்போது, கரோனா நோய்த் தொற்று காரணமாக கிறிஸ்தவா்களின் தவக்காலத்தின் பெரும்பாலான நாள்கள் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாமலும், தேவாலயங்களுக்குச் செல்ல முடியாமலும் இருந்தனா்.

அத்துடன் தவக்காலத்தின் 5வது வெள்ளிக்கிழமை குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகியவற்றோடு உயிா்ப்பு ஞாயிறான ஈஸ்டா் பண்டிகைக்கும் தேவாலயங்களுக்குச் செல்ல முடியவில்லை.

ADVERTISEMENT

இருப்பினும் உதகையில் உள்ள மறை மாவட்ட ஆயா் இல்லத்தில் சனிக்கிழமை இரவு உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் நடத்தப்பட்ட ஈஸ்டா் திருப்பலி இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவரவா் வீடுகளில் இருந்தவாறே கிறிஸ்தவ மக்கள் பிராா்த்தனையில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT