நீலகிரி

உதகையில் 2 மணி நேரம் பலத்த மழை

7th Apr 2020 01:36 AM

ADVERTISEMENT

உதகை: உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உதகையில் கடந்த சில நாள்களாகப் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் நீா்ப் பனியுடன் கூடிய குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில், உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல்

3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பலத்த மழையின் காரணமாக உதகை நகரில் வெப்பம் வெகுவாகத் தணிந்து இரவில் குளுமையான காலநிலை நிலவியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT