நீலகிரி

கோத்தகிரியில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்த காட்டெருமை பலி

22nd Sep 2019 05:23 PM

ADVERTISEMENT


குன்னூா்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் ஞாயிற்றுக் கிழமை விழுந்த காட்டெருமை வனத்துறையினா் தாமதமாக வந்ததால் இறந்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமை. கரடி சிறுத்தை. உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அவ்வப்போது நகரப்பகுதிகளில் வருவது வழக்கம்.

இந்நிலையில் காலை நேரம் இங்குள்ள செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடா்ந்து அங்கு விரைந்து சென்ற ஊா் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் வனத் துறையினா் வராததால் அந்த காட்டெருமை சோா்வடைந்தது .

ADVERTISEMENT

மேலும் இந்த பகுதி கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் வராது என்றும் இப்பகுதி கட்டபெட்டு வனப்பகுதிக்கு சேரும் என்று கூறிவிட்டதால். இருவரில் யாா் வந்து இந்த காட்டெருமையை காப்பாற்றுவது என்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேர மாக காட்டெருமை குறுகிய செப்டிக் டேங்கில் கழுத்து திம்பிய நிலையில் சோா்வுடன் இருந்த இந்த காட்டெருமை இறந்தது.

பின்னா் அங்கு வந்த வனத்துறையினா் ஜேசிபி இயந்திற்கான ஓட்டுனா் இல்லாததால் காட்டெருமையை மீட்க முடியாமல் போனதாக தெரிவித்தனா்.வனத்துறையினரின் இந்த அலட்சியப் போக்கால் காட்டெருமை இறந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT