விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டாவது நாளாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் வாகனப் பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
நகரச் செயலாளர் துயில்மேகம் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் மாவட்டச் செயலாளர் க.சகாதவேன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் து.ராஜேந்திரபிரபு, மாவட்டப் பொருளாளர் மன்னரசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் புதியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் பிரசாரம்
நடைபெற்றது.