நீலகிரி

காலாவதியான ரெடிமேட் பரோட்டா  விற்ற நிறுவனத்துக்கு ரூ. 500 அபராதம்

7th Sep 2019 07:13 AM

ADVERTISEMENT

குன்னூரில் காலாவதியான ரெடிமேட் பரோட்டா விற்ற நிறுவன உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரெடிமேட் பரோட்டா தயாரித்து விற்கப்பட்டு வருகிறது. இதில் பரசுராமன் தெருவில் உள்ள ஒரு பரோட்டா தயாரிப்பு நிறுவனத்தில் காலாவதியான பரோட்டாக்களை விற்பதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால் முருகனுக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அந்த நிறுவனத்தில் அவர் ஆய்வு செய்தார். அப்போது காலாவதியான ரெடிமேட் பரோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நிறுவன உரிமையாளர் மனோகரனுக்கு ரூ. 500 அபராதம் விதித்தார். 
மீண்டும் இதே தவறு தொடர்ந்தால் நிறுவனத்தின் உரிமம்  ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT