நீலகிரி

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம்: கோத்தகிரியில் 3 நாள்களில்  ரூ. 41 ஆயிரம் அபராதம்

4th Sep 2019 07:16 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, கோத்தகிரியில் கடந்த மூன்று நாள்களில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 41  ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
 மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
 அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், சீட்பெல்ட், தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 1,000, உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், குறைந்த வயதில் வாகனம் ஓட்டுபவர்களின் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை என சட்டம் கடுமையாக்கப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவலர்கள் கடந்த மூன்று நாள்களில் வாகனத் தணிக்கை மூலம் ரூ. 41 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
 இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்தி, மலைப் பாதையில், வாகனங்களை இயக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT