நீலகிரி

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் யானை உலா

4th Sep 2019 07:16 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பர்லியாறு பகுதியில்  செவ்வாய்க்கிழமை  குட்டியுடன் யானை  உலா வந்ததால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடந்த இரண்டு நாள்களாக குட்டியுடன் தாய் யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது யானைகள் சாலையில் உலா வருவதால் மலைப் பாதையில் வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்துள்ளனர். 
 இந்நிலையில் பர்லியாறு அருகே மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானைகள்  சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்ற பிறகு வனப் பகுதிக்குள் சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நிலையில் வனத் துறையினர் இப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT