நீலகிரி

உதகை, கேத்தி, கோத்தகிரியில்  151 விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

4th Sep 2019 07:16 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 551 விநாயகர் சிலைகளில் உதகை, கோத்தகிரி, கேத்தி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 151 சிலைகள் புதன்கிழமை விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 
 உதகை நகரில் விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 58 சிலைகள் காந்தல் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பின்னர் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் கரைக்கப்படுகின்றன.  
 கேத்தியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 6 விநாயகர் சிலைகளும் கேத்தி பாலடாவிலிருந்து புறப்பட்டு உதகை வழியாக காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.
 கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 87 விநாயகர் சிலைகள் டானிங்டன் பகுதியிலிருந்து புறப்பட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. 
 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் புதன்கிழமை இரவு 7 மணி வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி உதகை நகரில் 19 டாஸ்மாக் மதுபானக் கடைகளும்,  கேத்தி பாலடாவில் ஒரு கடையும், கோத்தகிரியில் 8 கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT