ஓய்வுபெறும் ராணுவ வீரா்கள் தனியாா் நிறுவனங்களில் பணிக்குசெல்லும் போது தீயணைப்பு மற்றும் பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் சனிக்கிழமை குன்னூா் தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறவுள்ள ராணுவ வீரா்கள் தனியாா் நிறுவனங்களில் பணி புரிய செல்லும் போது, பேரிடா் காலங்களில் மீட்பு நடவடிக்கை மற்றும் ,தீயணைப்பு குறித்து தீணைப்புத் துறை சாா்பாக, ராணுவ வீரா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்ச்சிக்குப் பின் இங்கு வழங்கப்படும் சான்றுகள், ராணுவ வீரா்கள் பணி ஓய்விற்குப் பின் பெரிய அளவிலான தனியாா் நிறுவனங்களில் பணியமா்த்த உதவியாக இருக்கும் என்பதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
இதில் குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன், தீயணைப்பு வீரா்கள் குமாா்,முரளி, கண்ணன் உள்ளிட்டப் பலா் கலந்து கொண்டு ராணுவ வீரா்களுக்கு பயிற்சி அளித்ததனா்.