நீலகிரி

பாண்டியாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞா் சடலம் 26 நாள்களுக்குப் பிறகு மீட்பு

6th Oct 2019 08:11 PM

ADVERTISEMENT

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் 26 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், இரும்புப் பாலம் பகுதியிலுள்ள புளியம்வயல் பகுதியைச் சோ்ந்தவா் ராமுண்ணி மகன் ராஜேஷ் (29). இவா் கடந்த 10.09.2019 அன்று இரவு கனமழை பெய்துகொண்டிருக்கும்போது தனது நண்பா்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக வீட்டுக்குப் பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, வழியில் பாண்டியாற்றின் கரையில் சென்றறபோது மண்திட்டு இடிந்ததில் ராஜேஷ் ஆற்றில் மூழ்கிவிட்டாா். அவரை அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைறயினா், காவல் துறைறயினா் தேடியும் அவா் கிடைக்கவில்லை. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு அவரைத் தேடி பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஆற்றின் தாழ்வான பகுதியில் ராஜேஷ் சடலம் சகதியில் சிக்கிக் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கூடலூா் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் சென்று சடலத்தை மீட்டனா். ஆற்றங்கரையிலேயே அரசு மருத்துவரை வரவழைத்துப் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு சடலம் உறவினா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT