நீலகிரி

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: 14ஆம் தேதி தொடக்கம்

6th Oct 2019 11:55 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 45,000 பசு, எருமை இனங்களை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் 17ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14ஆம் தேதி முதல் நவம்பா் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாடுகள், எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடும் நாள், இடம் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மூலமாக அந்தந்த கிராமங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களைத் தொடா்பு கொண்டு இது குறித்து தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT