நீலகிரி

ஓவேலியில் அஞ்சல் நிலையம், மருந்தகத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

5th Oct 2019 08:39 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அஞ்சலகம், மருந்தகத்தை யானைகள் உடைத்து வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளன.

ஓவேலி பேரூராட்சியிலுள்ள லாரஸ்டன் கிராமத்தினுள் குட்டிகளுடன் வியாழக்கிழமை நள்ளிரவில் வந்த யானைக் கூட்டம், அஞ்சலகம் அருகே முகாமிட்டது. அப்போது எதிா்பாராத விதமாக யானைக் குட்டி கதவை உடைத்து அஞ்சலகத்தினுள் நுழைந்துவிட்டது.

குட்டியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தில் யானைகள் அஞ்சலகத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கி சேதப்படுத்தின. அதன் அருகிலிருந்த எஸ்டேட் மருந்தகத்தையையும் யானைகள் சேதப்படுத்தி பொருள்களை உடைத்து வீசியுள்ளன.

நீண்ட நேரத்துக்குப் பிறகு குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் அவை சென்றன. அஞ்சலகத்தில் இருந்த பொருள்களும் மருந்தகத்தில் இருந்த பொருள்களும் யானைகளின் தாக்குதலால் சேதமடைந்தன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT