நீலகிரி மாவட்டம் மஞ்சூா் கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதி பொது மக்கள் கவனமுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூா் கெத்தையை யொட்டியுள்ளப்பகுதியில் சிறுத்தை, யானை,காட்டெருமை, மான் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழந்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
உணவுத் தேடி ஊருக்குள் வரும யானைகள் இப்பகுதியில் உள்ள சாலைகளின் குறுக்கே நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் அச்சதுடன் வாகனங்களை இயக்கி வருகின்றனா். மஞ்சூா் கெத்தை சாலையில் அவ்வப்போது கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை உலா வருவதால் இப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினா் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனா்.