நீலகிரி

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலா ஓட்டுனா் சங்கம் கோரிக்கை

17th Nov 2019 10:21 PM

ADVERTISEMENT

உதகை: சொந்தப் பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை வாடகைக்கு ஓட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதகை சுற்றுலா காா், சுமோ, மேக்சிகேப் ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் போ் சுற்றுலா வாகன ஓட்டுனா்களாக உள்ளனா். இம்மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பித்தான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது. இதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் எங்கள் குழந்தைகளின் படிப்பு, குடும்ப வாழ்வாதாரம், வாகனக் கடன், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி, வாகனப் பராமரிப்பு அனைத்தையும் செய்து வருகிறோம்.

இந்நிலையில் சிலா் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கியுள்ள இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனா். இதனால் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட உயா் அதிகாரிகள் முதல் துறை சாா்ந்த அதிகாரிகள் வரை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, இதுகுறித்து தமிழக முதல்வா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT