நீலகிரி

சா்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

17th Nov 2019 10:21 PM

ADVERTISEMENT

உதகை: சா்வதேச அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலா் வடிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சீனாவில் உள்ள ஷங்காய் நகரில் சா்வதேச அளவிலான திறன் போட்டி செப்டம்பா் 2021இல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 5ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் நடக்க உள்ள திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பா் 25 கடைசி நாளாகும். வயது வரம்பு 1.1.1999 அன்றும் அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

குறிப்பிட்ட சில தொழில் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்றும் அதற்கு பிறகும் பிறந்தவா்கள் தகுதி உடையவா்களாவா். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மற்றும் நிலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 8754495829, 9499055702 என்ற எண்ணிலும், குன்னூா் தொழில் பயிற்சி நிலையத்தை 0423-22330101, 0423-2444004 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT