நீலகிரி

மக்கள் குறைதீா் நாள் முகாம்: 174 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

12th Nov 2019 05:53 AM

ADVERTISEMENT

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 174 கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீா்வு காண மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோா் உதவித்தொகை, சாலை, குடிநீா், கழிப்பிடம், மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 174 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா உத்தரவிட்டாா்.

மேலும் கடந்த குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டு, தீா்வு காணாமல் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 வீதம் ரூ.29 லட்சத்து 2500, தாற்காலிக இயலாமை பிரிவின் கீழ் ஓய்வூதியமாக ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 வீதம் இயற்கை மரண உதவித்தொகை, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000-க்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா வழங்கினாா்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கண்ணன், கலால் துறை உதவி ஆணையா் பாபு, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் தேவகுமாரி, மாவட்ட தாட்கோ மேலாளா் ரவிசந்திரன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT