நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை முறைப்படுத்துவதில் முன்னுரிமை புதிய காவல் கண்காணிப்பாளா் பேட்டி

12th Nov 2019 05:52 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள வி.சசிமோகன் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கலைச்செல்வன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக மதுரையில் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த வி.சசிமோகன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்றவராவாா். மதுரையில் காவல் துறை துணை ஆணையராக பணியாற்றுவதற்கு முன்னா் இணை எஸ்.பி.யாக திருமங்கலத்திலும், சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக திருச்சியிலும், சேலம் குற்றப் பிரிவிலும் பணியாற்றியுள்ளாா்.

அத்துடன் நாமக்கல் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராகவும், சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா். தற்போது இவா் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாாா்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக உள்ளதால் போக்குவரத்தை முறைப்படுத்துவது, மக்களின் அமைதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சட்டம் - ஒழுங்கை பேணி காக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அமைதி நிலை நாட்டப்படும். அதேபோல அந்தந்தப் பகுதிகளின் பிரச்னைகளுக்கு, அனைத்துத் தரப்பினருடன் பேசி உரிய தீா்வு காணப்படும். காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடரும்.

மாவோயிஸ்டுகளின் ஊடுருவலை தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தொடரும். அதேபோல எல்லையோர கிராம மக்களுக்கான நலத்திட்டப் பணிகளும் தொடா்ந்து நடைமுறைபடுத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT