நீலகிரி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி

11th Nov 2019 01:22 AM

ADVERTISEMENT

தமிழக அரசு சாா்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி குன்னூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குன்னூா் பேருந்து நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கலைக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் மது அருந்துவதால் ஏற்படும் குடும்பப் பிரச்னை, உடல் பிரச்னை, விபத்துகள், மாணவ, மாணவியா் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதை குறும் நாடகம் மூலம் நடித்துக் காட்டினா். மேலும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதை பொது மக்கள் கண்டு ரசித்தனா்.

 

ADVERTISEMENT

Image Caption

விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைக் குழுவினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT