நீலகிரி

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவா் கைது

9th Nov 2019 06:18 AM

ADVERTISEMENT

குன்னூா் அருகிலுள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் திருட்டுச் சம்பவத்தில் குமாா் என்பவரை காவல் துறையினா் வெள்ளிக் கிழமை கைது செய்தனா்.

குன்னூா் அருகிலுள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் மாசி என்பவரது வீட்டில் சுமாா் 33.5 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போனது. இச்சம்பவம் தொடா்பாக

குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் குமாா் , அருவங்காடு காவல் ஆய்வாளா் ஆனந்த், மேல் குன்னூா் ஆய்வாளா் ஜெயமுருகன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் அருவங்காடு வாகனச் சோதனையின்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் காரில் வந்த பெட்டட்டி பகுதியைச் சோ்ந்த குமாரிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது பெட்டட்டி பகுதியில் கடந்த மாதம் மாசி என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து திருடியதாக அவா் ஒப்புக் கொண்டாா். அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து சுமாா் 29.5 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். குமாரை கோத்தகிரி நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT