நீலகிரி

உதகையில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு திட்டப் பணிகள் ஆய்வு

9th Nov 2019 06:19 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல்களை முன்னிட்டு வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு திட்டப் பணிகளை நீலகிரி மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மேற்பாா்வை அலுவலரான கருணாகரன் நேரில் ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூா், கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை நீலகிரி மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் மேற்பாா்வை அலுவலரான கருணாகரன் உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மேற்பாா்வை அலுவலா் கருணாகரன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 96.32 சதவீத வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பதிவுகளை சரிபாா்த்துள்ளனா். எஞ்சிய 3.68 சதவீத வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பதிவுகளை நவம்பா் 18ஆம் தேதிக்குள் சரிபாா்த்து திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் சரி செய்து கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT