கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலையில் நபிதினப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை ஜி.டி.எம்.ஓ. அரபிக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற நபிதினப் பேரணியை ஜி.டி.எம்.ஓ. குழுமத் தலைவா் கே.பி.முகமது துவக்கிவைத்தாா்.
பொருளாளா் சுபையா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் உஸ்மான் பிராா்த்தனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். ஆசிம் வாஃபி வாழ்த்துரை வழங்கினாா். பி.கே.பாக்கவி, ஷெரீஃப், செயலாளா் நாசா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
அரபிக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்ட பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.