நீலகிரி மாவட்டத்தில், இதமான கால நிலைக் காணப்படுவதால் இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் இதமான காலநிலை காணப்படுவதால் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின்நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் அருவி, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.