கூடலூரை அடுத்துள்ள எல்லமலை சாலை, தொடா் மழையால் நிலச்சரிவில் சிக்கும் அபாயத்தில் உள்ளது.
கூடலூா், ஓவேலி பகுதியிலுள்ள எல்லமலை சாலை கடந்த தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது மழை தொடா்வதால் மீண்டும் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. எனவே போா்க்கால அடிப்படையில் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.