கோத்தகிரியில் பீன்ஸ் அறுவடை சுறுசுறுப்பு

கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் விளைந்துள்ள பீன்ஸை விவசாயிகள் அறுவடை செய்து  வருகின்றனர். 

கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் விளைந்துள்ள பீன்ஸை விவசாயிகள் அறுவடை செய்து  வருகின்றனர். 
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இருப்பினும், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் காய்கறி சாகுபடி கணிசமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு கோத்தகிரி, கட்டபெட்டு, கூக்கல்தொரை, சுள்ளிகூடு மற்றும் நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் பீன்ஸ் பயிரிட்டுள்ளது.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுப்பொருள்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் கடன் பெற்று விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு மற்றும் வன விலங்குகளின் தொல்லை உள்ளிட்ட சவால்களைக் கடந்து சாகுபடி செய்துள்ள பீன்ஸ் ஒரு மாதத்திலேயே அறுவடைக்குத் தயாராகிறது. 
அதிகபட்சமாக ஆண்டுக்கு ஐந்து முறை அறுவடை செய்ய முடியும் என்பதாலும், கணிசமான லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80 முதல் ரூ. 130 வரை தரத்துக்கு ஏற்ப விலை கிடைத்து வருகிறது.
அறுவடை செய்யப்படும் பீன்ஸ் தரம் பிரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர் மண்டிகளில் விற்பனை செய்யப்படும்போது கட்டுப்படியான விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் கனமழை பெய்யும் பட்சத்தில் அறுவடைக்குத் தயாரான பீன்ஸ் தோட்டத்திலே அழிந்து விடுவதற்கான வாய்ப்புள்ளதால் விவசாயிகள் துரிதகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com