தும்மனட்டி கிளை நூலகத்தில் நடைபெற்ற வாசகர் வட்ட கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தும்மனட்டி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வாசகர் வட்டத் தலைவராக ராஜாமணி, துணைத் தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டனர். வாசகர் வட்டத்தின் முன்னாள் தலைவரான குமார் ஆற்றியப் பணிகளுக்காக அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நூலகத்திற்கு புதிதாக உறுப்பினர்களையும், புரவலர்களையும் சேர்ப்பது, பொதுமக்கள், மாணவ, மாணவியர் இந்நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நூலகத்தின் புதிய புரவலராக ராஜூ தன்னை இணைத்துக்கொண்டார். முன்னதாக நூலகர் குமார் வரவேற்றார். உறுப்பினர் டி.குமார் நன்றி கூறினார்.