கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 86 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
கூடலூர் வருவாய் வட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை அம்பலமூலா கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை வகித்து குறைகளைக் கேட்டறிந்தார். பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்த பொதுமக்கள் சார்பில் 86 மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டன.முகாமில் 33 பழங்குடி மக்களுக்கு ஜாதிச்சான்றுகள், 10 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு, தோட்டக் கலைத் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு பசுமைக் குடில் வழங்கப்பட்டது.
முகாமில், கூடலூர் கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமார், வட்டாட்சியர் ரவிகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.