உதகை நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 989 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
உதகையில் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி வடமலை தலைமை வகித்தார். உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தேசிய வங்கிகளில் நிலுவையில் உள்ள வராக்கடன் சம்பந்தமான வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களிடம் சமரசம் செய்து வழக்குகள் சுமுகமாக முடிக்கப்பட்டன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள
குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டன. மொத்தம் 3,415 வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டதில் 989 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு 5.50 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.