நீலகிரி

தவ்ஹீத் ஜமாத் ஆலோசனை கூட்டம்

12th Jul 2019 07:42 AM

ADVERTISEMENT

குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் சபிதீன் தலைமை வகித்தார். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் முகமது அலி முன்னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிரசாரம் செய்வது,  பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இஸ்லாம் மார்க்க வழிமுறைகளை தொடர் பிரசாரம் செய்வது, குன்னூர் மவுண்ட் சாலை சின்ன பள்ளிவாசல் அருகே மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அமைப்பின் செயலாளர் இஸ்மாயில் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT