நீலகிரி

கோத்தகிரி ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

6th Jul 2019 09:13 AM

ADVERTISEMENT

கோத்தகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை சார்பில் ரூ.1.34 கோடி மதிப்பில் நிறைவடைந்த மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட்  திவ்யா வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கெங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட மெட்டுக்கல் பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.54.20 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலைப் பணி, மாவட்ட பஞ்சாயத்து பணி சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை, ஒதுக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம்  மதிப்பில் மெட்டுக்கல் பகுதியில் முடிக்கப்பட்ட கான்கிரீட் கழிவுநீர் கால்வாய், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40.17 லட்சம் மதிப்பில் கடசோலை பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, கரக்கோடு மட்டம் பகுதியில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 பசுமை வீட்டையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
 அதேபோல, மூலதன நிதி ஒதுக்கீடுத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட கப்பட்டி சாலை பணி, சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி, ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட சக்கத்தா பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குழாய் அமைக்கும் பணி, முதலவரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ்  தலா ஒரு பயனாளிக்கு ரூ.1.80 லட்சம் வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.5.40  லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 3 பசுமை வீட்டுகள், பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ஜக்கனாரை பகுதியில் ரூ.1.70 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்டு வரும் வீடு மொத்தம் ரூ.ஒரு கோடியே, 34 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டடுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், கோல்டி சாராள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT