அதிக பாரம் ஏற்றி வந்த கேரள மணல் லாரியை கூடலூர் போக்குவரத்து போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதிக்குள் கேரளத்தில் இருந்து முறையான ரசீது இல்லாமல் எம்-சான்ட் மணல் அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்து எல்லையோர கிராமங்களில் விநியோகம் செய்வதாக கூடலூர் பகுதி லாரி உரிமையாளர்கள் ஏற்கெனவே போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கூடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அய்யர்சாமி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளத்திலிருந்து அதிக பாரம் ஏற்றிவந்த மணல் லாரியை சோதனையிட்டபோது முறையான ரசீது இல்லை. உடனே லாரியை பறிமுதல் செய்து வருவாய்த் துறையிடம் ஒப்படைத்தனர்.