நீலகிரி

ஓவேலியில் தனியார் தோட்டத் தொழிலாளர்கள்  காத்திருப்புப் போராட்டம்

2nd Jul 2019 08:28 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள தனியார் தோட்டத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள பார்வுட் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் மற்றும் போனஸ் உள்ளிட்ட பணப் பயன்கள் வழங்கப்படவில்லை கூறப்படுகிறது.
எஸ்டேட் நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படாததால் தற்காலிக மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேர் கடந்த 8 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது. தொழிலாளர் துறையும், மாவட்ட நிர்வாகமும் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT