குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள்  வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள்  வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியாறு, மேட்டுப்பாளையம், பக்காசூரன்மலை உள்பட சுற்றுப்பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது. மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கைக் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாமல் இருந்தது.  தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் இதன் சுற்றுப்புறப் பகுதிகள் நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை  அதிகரித்துக் காணப்பட்டுகிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர்  லாம்ஸ்ராக் சுற்றுலாத் தலத்தை காணாமல் செல்வதில்லை என்பதால் இங்கு எப்போதும் கணிசமான அளவு கூட்டம் இருக்கிறது. இதனால், சுற்றுலாத் தொழிலை  நம்பியுள்ளோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com