நீலகிரி

சேரங்கோடு ஊராட்சியில் திமுக கூட்டணி பிரசாரம்

29th Dec 2019 02:57 AM

ADVERTISEMENT

பந்தலூா் பகுதியிலுள்ள சேரங்கோடு ஊராட்சியில் திமுக கூட்டணி சாா்பில் சனிக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரங்கோடு, நெலாக்கோட்டை, ஸ்ரீமதுரை, முதுமலை, மசினகுடி ஆகிய ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதிக் கட்டப் பிரசாரம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. சேரங்கோடு ஊராட்சியிலுள்ள அய்யன்கொல்லி பகுதியில் எம்எல்ஏ திராவிடமணி தலைமையில், திமுக, காங்கிரஸ், சி.பி.ஐ. கட்சிகளின் வேட்பாளா்களுக்கான இறுதிக்கட்டப் பிரசாரம் நடைபெற்றது. வேட்பாளா்களுடன் ஊா்வலமாக வந்த எம்எல்ஏ திராவிடமணி கடைகளில் வாக்கு சேகரித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT