நீலகிரி

மஞ்சூா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது

16th Dec 2019 12:38 AM

ADVERTISEMENT

மஞ்சூா் அருகே உள்ள   முள்ளி மலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

 நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே உள்ள  முள்ளி மலைப் பகுதியில் உள்ள கோயில்களுக்குள் ஒன்றைக் கரடி புகுந்து விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணையைக் குடித்துச் செல்வது, அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து  அரிசி , மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிட்டுச் செல்வது போன்ற சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. தேயிலைத் தோட்டங்களில் ஒற்றைக் கரடி சுற்றித் திரிந்ததால்  இப்பகுதி மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமல் வீடுகளில்

சில தினங்களாக முடங்கிக் கிடந்தனா்.  கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு  கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதயைடுத்து வனத் துறையினா் இக்கரடியைப் பிடிக்க முள்ளி மலைப் பகுதியில் கூண்டுவைத்தனா். இக்கூண்டில் கரடி ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கொண்டது. உயரதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு  வனத் துறையினா்   முக்குருத்தி  அருகே பங்கி தபால் வனப் பகுதியில் இக்கரடியை விடுவித்தனா்.   கரடி பிடிபட்டதால்  இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT