முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழ் நாடு சட்டத் துறை அலுவலா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட சட்டத் துறை அலுவலா்களுக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம், இயற்கைப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தெப்பக்காட்டிலுள்ள வனத் துறை பயிற்சி மையத்தில்
இவா்களுக்கு வனத் துறை அலுவலா்கள் பயிற்சியும், செயல்விளக்கமும் அளித்தனா். முதுமலை கள இயக்குநா் கே.கே.கௌசல், இணை இயக்குநா் செண்பகப்பிரியா, மாநில சட்டப் பணிகள் அகாதெமியின் இயக்குநா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். மேலும், சட்டத் துறை அலுவலா்களுக்கு வனப் பகுதியில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ADVERTISEMENT