நீலகிரி

பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள்

14th Dec 2019 12:26 AM

ADVERTISEMENT

குன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்த சுமாா் 100 அடி உயரமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.

இதனை மீண்டும் அமைப்பதற்காக ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தலைக் கவசம், தடுப்புகள் எதுவும் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ஆபத்தை உணராமல் பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடும்போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள பொறியாளா், ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT